இலங்கை அகதிகள் படகு மூலம் தப்பிச் சென்றால் 1093 என்ற எண்ணுக்கு உடனடியாக அறிவிக்குமாறு தமிழக காவல்துறையினர் அறிவித்தல் விடுத்துள்ளனர்.
அத்துடன் தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும்போது, கண்டிப்பாக லைப் ஜக்கற் அணியவேண்டுமெனவும், அனைத்துப் படகுகளிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படவேண்டுமெனவும், தெரிவித்திருப்பதுடன் இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடிக்கச் செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கடலுக்கு மீன்பிடிக்கச் செல்பவர்கள் தம்முடன் தமது அடையாள அட்டையையும் எடுத்துச் செல்லவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.