ஐரோப்பிய கால்பந்து லீக் ஆட்டத்தில் அதிக கோல் போட்டுள்ள மெஸ்ஸிக்கு தங்க சப்பாத்து விருது வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில் ஐரோப்பிய கால்பந்து லீக் ஆட்டத்தின் கடந்த போட்டியில் அதிக கோல்கள் மெஸ்ஸி போட்டுள்ளதாகவும்,ஸ்பெயினின் கேம்ப் நோ நகரில் பார்சிலோனா எதிர் டிபோர்டிவோ லா கொருனா அணிகள் மோதிய லா லிகா போட்டிக்கு முன்னதாகவே இவ் தங்க சப்பாத்து விருது வழங்கி மெஸ்ஸி கௌரவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்சிலோனா எதிர் டிபோர்டிவோ லா கொருனா அணிகள் மோதிய லா லிகா போட்டியில் கிடைத்த உதை வாய்ப்பில் மெஸ்ஸி கோல் அடிக்கத் தவறியுள்ளதாவும்,பார்ர்சிலோனா 4ற்கு0 என்றகோல் கணக்கில் டிபோர்டிவோ அணியை வெற்றிபெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.