குடியரசு தினத்தில் டில்லியில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவின் குடியரசு தினம் ஜனவரி 26ம் திகதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக 10 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனையடுத்து டில்லியில் அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குடியரசு தினத்தில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குடியரசு தினத்தில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் 3 பேர் பழைய டில்லியில் பதுங்கியுள்ளனர். ஆப்கனை சேர்ந்த அவர்கள், தாக்குதல் நடத்த பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள். அவர்களுக்கு காஷ்மீரில் இருந்து உத்தரவுக்காக காத்திருக்கின்றனர் என உளவுத்துறை அதிகாரிகள் டில்லி பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.