துளியம்… உங்களோடு….

துளியம்

துளியம் என்ற சொல் தமிழில் பயன்பாடு குறைந்து காணப்பட்டாலும் Quantum என்ற ஆங்கில வடிவத்தில் பல்பயன்பாடு மிக்க ஒரு சொல்லாகும்.

இனிமேல் பிரிக்கமுடியாது என்ற நிலையிலுள்ள துணிக்கையை துளியம் எனச்சொல்லினும் அப்போதும் அது பிணைந்திருப்பது அதன் சிறப்பம்சமாகும்.

உலகத்தின் அனைத்துப் பொருட்களுமே ஒன்றோடொன்று பிணைந்தும் பிரிந்தும் பிணைந்தும் இருக்கின்றன. ஒன்றின் மாற்றம் மற்றயதில் மாற்றத்தை உருவாக்குகின்றது. மற்றயதின் மாற்றம் மாற்றம் ஏற்படுத்தியதில் மாற்றத்தை உருவாக்கும்.

துளியம்

துளியம் இணையசெய்தி சேவையாக உங்கள் முன் வலம்வருகின்றது. புதிய ஆண்டில் தனது கால்களை பரப்புகின்றது துளியம்.

தமிழ் இணைய பரப்பில்; துளியம் எதனை புதிதாக சொல்லப்போகின்றது? அல்லது எதனை நோக்கி அதன் பயணம் இருக்கும்? அதன் பயணம் எப்படியானதாக இருக்கப்போகின்றது?

என பலகேள்விகள் உங்களுக்காய் காத்திருக்கும்.

துளியம்

மக்களின் குரலாய் இயன்றவரை நடுநிலைமையோடு செய்திகளை கருத்துக்களை உங்கள் முன்கொண்டுவரும்.

உங்கள் கேள்விகளுக்கான பதில்களை நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள்.

இது துளியம்.

துளியம் தொடர்பான உங்கள் கருத்துக்களை என்ற thuliyam.com@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது எமது பேஸ்புக்கிலோ அனுப்பிவையுங்கள்.

உங்களது ஆக்கங்கள் இடம்பெறவிரும்பினால் எம்மோடு தொடர்புகொள்ளுங்கள்.

உங்கள் விளம்பரங்கள் இடம்பெறவிரும்பினால் எம்மோடு தொடர்புகொள்ளுங்கள்.